பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்- விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்- விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், விக்ரம், தனுஷ், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை கையில் வைத்திருக்கும் இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக பாலிவுட்டில் தயாராகும் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று படத்தில் இடம்பெற்றிருந்த கொலைவெறி பாடலுக்கு பிறகு சர்வதேசளவில் பிரபலமானார் அனிருத். கோலிவுட் சினிமாவை பிரதானமாக கொண்டு பணியாற்றி வந்தாலும் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வருகிறார். 

பீஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவான ‘டேவிட்’ படம் மூலம் பாலிவுட்டில் கால்பதித்தார் அனிருத். அதை தொடர்ந்து தெலுங்கு சினிமா உலகிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் மட்டுமே உருவாக்கப்படும் ஒரு படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

தனுஷ், அக்‌ஷய் குமார் நடித்து வரும் ‘அத்திரங்கி ரே’ படத்தை இயக்கி வரும் ஆனந்த் எல் ராய் தயாரிக்கவுள்ள படத்தில் அவர் பணியாற்றவுள்ளார். இந்த படம் இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

From Around the web