லியோ படத்தை பார்த்த அனிருத் கூறிய விமர்சனம்..! கொண்டாட்டத்தை ஆரம்பித்து விஜய் ரசிகர்கள்..!

 
1

நடிகர் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி என்பதால் லியோ படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது…அதனை போல LCU வில் வரும் என எதிர்பார்க்க படுகிறது..இந்நிலையில் இப்படத்தின் முதல் விமர்சனம் வந்துள்ளது.

இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் நடக்காத ஒரு விஷயத்தை லியோ படத்திற்காக செய்துள்ளனர் ரசிகர்கள்.அதாவது இப்படத்தின் ப்ரீ புக்கிங் ரிலீஸுக்கு 40 நாட்கள் இருக்கும் நிலையில் துவங்கினார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கில் லியோ திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது என்று தான் சொல்லவேண்டும் யாருமே எதிர்பார்க்காத வசூல் வரும் என் தெரிகிறது… இதனால் முதல் நாள் மாபெரும் வசூல் சாதனையை வெளிநாடுகளில் லியோ படைக்கும் என்கின்றனர்.

லியோ படத்தின் பிசினஸ் இப்போது வரை ரூ.487 கோடி வரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…அதனால் செம ரிசல்ட் இருக்கும் என்று சொல்லப்படுகிறது…இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ.300 கோடி இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்…அதுவே பெரிதாக பேசப்பட்டது.

இதை வைத்து பார்க்கும்போது லியோ திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.187 கோடி வரை லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது இதுவரை ரிலீஸுக்கு முன் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் கொடுக்காத அதிக லாபத்தை லியோ திரைப்படம் கொடுத்துள்ளது…

இந்நிலையில் லியோ படத்தை பார்த்த அனிருத் படம் தீயாக இருப்பதை சொல்லும் விதமாக ஒரு ட்வீட் போட்டுள்ளார் அது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.


 

From Around the web