நானும் கடைசியில் ஈஸ்வரி பாட்டி கிட்ட திட்டு வாங்கிட்டேன் : அனிதா சம்பத்.!  

 
1
சமீப காலமாகவே பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. அதாவது இந்த சீரியலில் ராதிகாவின் கர்ப்பம் கலைவதற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று கமலா கம்ப்ளைன்ட் கொடுத்ததிலிருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

தற்போது ஈஸ்வரி குற்றம் செய்யவில்லை என்பது நிரூபணமாகி அவர் விடுதலை ஆகியுள்ளதோடு, கோபி தனது பிள்ளை இல்லை என தலைமுழுகி விடுகின்றார். இவ்வாறு இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் பிக் பாஸ் அனிதா சம்பத் என்ட்ரி ஆகி உள்ளார். அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது புட் காம்படிஷன் ஒன்று நடைபெற உள்ளது.

அதில் கோபியும் பாக்கியாவும் பங்கு பற்ற உள்ளார்கள். இதில் வெற்றி பெற போவது யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இவ்வாறான நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிக்கும் கோபி புதிதாக என்ட்ரி கொடுக்க உள்ள அனிதா சம்பத்துடன் இணைந்து ரில்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

From Around the web