கள்ளக்குறிச்சி விஜய் விசிட்டை கிண்டல் செய்த அனிதா சம்பத்..!

 
1

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த விஷ சாராய மரணங்கள் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில திரையுலக பிரபலங்கள் திமுக அரசை நேரடியாகவே விமர்சனம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய விஜய் முதல் வேலையாக கள்ளக்குறிச்சி மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அடுத்த கட்டமாக நேற்று மாலை அவர் நேரடியாக கள்ளக்குறிச்சி சென்றார்.தமிழ் திரையுலகில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்ற ஒரே நடிகர் விஜய் தான் என்று பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகை, செய்தி வாசிப்பாளர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் விஜய்யின் இந்த விசிட்டை கிண்டல் செய்து தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்து அவர் கூறிய போது ’நாட்டுக்காக போராட பார்டருக்கு போனப்ப தீவிரவாதிகளிடம் நேருக்கு நேர் தாக்கும் போது நெஞ்சில குண்டு பட்டு ஹாஸ்பிடல்ல கவலைக்கிடமா இருக்காங்க.. பாவம்’ என்று கிண்டல் செய்துள்ளார்.

கள்ளச்சாராயம் குடிப்பதே ஒரு சமூக விரோதச் செயல் என்ற நிலையில் கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல விஜய் மாதிரி பிரபலங்கள் செல்வது தேவையில்லாதது என்று பலர் அனிதா சம்பத் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுப்பது எந்த அளவுக்கு தவறான செயலோ அதேபோல்தான் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டவர்களுக்கு ஆறுதல் கூறச் செல்வதும் தவறானது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


 

From Around the web