மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் ’அஞ்சாம் பாதிரா’...!

 
அஞ்சாம் பாதிரா

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘அஞ்சாம் பாதிரா’ படம் விரைவில் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மாதத்திற்கு ஒருமுறை த்ரில்லர் படங்கள் வரிசைக் கட்டி வெளியாகி வருகின்றன. இதற்கான டிரெண்டை உருவாக்கி வைத்த படம் த்ரிஷ்யம். போதாகுறைக்கு த்ரிஷயம் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி. இதனால் மலையாளத்தில் த்ரில்லர் படங்களின் ஆதிக்கம் கொஞ்ச காலத்துக்கு நீடிக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இந்த டிரெண்டில் சிக்கிக் கொண்டு வெளியாகி மக்களிடம் நல்ல பெயர் பெற்ற படம் ‘அஞ்சாம் பாதிரா’. ஐந்தாம் நாள் பாதி இரவில் என்று தமிழில் பொருள்படும் இந்த படத்தில் தொடர் கொலை, கொலைகாரனை தேடி பிடிப்பதே கதைக்கரு.

கதையின் நாயகனாக குஞ்சாகோ போபன் நடித்திருந்த இப்படம் மலையாள ரசிகர்களை கடந்து தமிழகத்திலும் ரசிகப்பட்டது. வெறு 6 கோடியில் உருவான இப்படம் மொத்தமாக ரூ. 60 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்கிறது ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட். தமிழ் பதிப்பில் நாயகனாக அதர்வா நடிக்கிறார். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

From Around the web