அவங்களா இது..?? கொடுக்காளி கதாநாயகி யாரென்று தெரிகிறதா..?

விடுதலை படத்துக்கு பிறகு நடிகர் சூரி ‘கொட்டுக்காளி’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற அன்னா பென் கதாநாயகியாக நடிக்கிறார். 
 
நடிகை அன்னா பென்

நடிகர் சூரி இரண்டாவது முறையாக கதாநாயகனாக நடிக்கும் ‘கொடுக்காளி’ படத்தில் கதாநாயகி அனா பென்னின் தோற்றம் கேரள ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மலையாள சினிமாவின் பிரபலமான திரைக்கதை ஆசிரியர் பென்னி பி. நயராம்பலம். இவருடைய மகள் தான் அனா பென். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ’கும்பலாங்கி நைட்ஸ்’ படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து ‘ஹெலன்’, ‘கப்பேளா’, ‘நைட் ட்ரைவ்’, ‘கப்பா’ என இந்திய சினிமா கொண்டாடிய பல்வேறு மலையாளப் படங்களில் நடித்து புகழடைந்தார். தற்போது இவர் தமிழில் தயாராகி வரும் ‘கொட்டுக்காளி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

கொட்டுக்காளி படத்தில் சூரி மற்றும் அன்னா பென்

இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ். வினோத் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் கொட்டுக்காளி படத்தை தனது எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் 47 நொடி ஓடக்கூடிய டீசர் வெளியானது. அதில் அனா பென்னின் தோற்றம் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்த கேரள ரசிகர்கள் உட்பட மலையாள சினிமா ரசிகர்கள் ஆச்சரியமடைந்து போயுள்ளனர்.


மலையாள சினிமாவின் புதிய அலை மூலம் தேசியளவில் பிரபலமானவர் அனா பென். கேரளப் பெண்களுக்கே உரித்தான குணநலன்கள் கொண்ட அவரை, ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கொடுக்காளி படத்தில் அவருடைய கெட்-அப் பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.

ஒரு மலையாளப் பெண்களுக்கு ஏற்ற குணநலன் கொண்டவரை, அச்சு அசலாக தமிழ் பெண்ணாக மாறி இருப்பதாக பலரும் கமெண்டு செய்து வருகின்றனர். இதனால் தமிழ் சினிமாவில் டிரெண்ட் அடித்த ‘என்னடா பண்ணி வச்சிருக்கீங்க’ என்கிற வசனத்தை பலரும் ‘கொட்டுக்காளி’ பட டீசரை பார்த்து கமெண்டு செய்து வருகின்றனர்.
 

From Around the web