ஜொலிக்கும் தங்க உடையில் அண்ணாச்சி பட ஹீரோயின்..!
 

 
ஊர்வசி ரவுதலா

லெஜண்ட் சரவணன் அருள் உடன் கதாநாயகியாக நடித்து வரும் ஊர்வசி ரவுதலா தக தக என்று மிண்ணும் தங்க உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சென்னையின் முன்னணி வணிக நிறுவனமாக இருக்கும் சரவணன் ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் புதியதாக தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல விளம்பர பட இயக்குநர் ஜேடி மற்றும் ஜெர்ரி இருவரும் இணைந்து இயக்கி வருகின்றனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஊர்வசி ரவுதலா. இந்தியில் வெளியான சிங் சாப் தி கிரேட் என்கிற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுதலா. சென்னையைச் சேர்ந்த இவர் பிரபல மாடலாகவும் உள்ளார். சரவணன் அருள் உடன் நடிப்பதை தொடர்ந்து இவர் கோலிவுட்டில் பேசு பொருளாகி உள்ளார். அதனால் இவர் என்ன செய்தாலும் அது ஊட்கங்களில் செய்தியாக வெளியாகி விடுகிறது.

தொடர்ந்து சமூகவலைதளங்களில் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு புகைப்படங்களை எடுத்து பதிவிடுவது ஊர்வசி ரவுதலாவின் வழக்கம். அந்த வகையில் தங்க நிற உடையில் ஜொலிக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஊர்வசி ரவுதலா. இது தற்போது வைரலாகி வருகிறது.
 

From Around the web