‘அண்ணாமலை’ திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் நிறைவு!

 
1

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ராதாரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, ரேகா, வைஷ்ணவி மற்றும் பலர் நடித்திருந்த படம் தான் அண்ணாமலை.ரஜினிகாந்தின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை கட்டி இழுத்த திரைப்படமும் இதுவாகும்.

1992 ஆம் ஆண்டு சவெளியான 'அண்ணாமலை' திரைப்படம் மாபெரும் வரவேற்புடன் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. 175 நாட்களுக்கும் மேலாக ஓடி அசாத்திய வெற்றி பெற்ற இந்தப் படம் 1995 வரை தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கைவசம் வைத்திருந்தது. பின்னர் மீண்டும் ரஜினி மற்றும் சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் வெளியான 'பாட்ஷா' படம் தான் இந்த சாதனையை முறியடித்தது. 

இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினியின் அனல் பறக்கும் பெயர் அறிவிப்பு டிசைன் அண்ணாமலை படத்தில் ஆரம்பித்தது தான். வந்தேண்டா பால்காரன் என பால் போல் உள்ளம் கொண்ட சிறந்த நண்பனாகவும், அதிரடி காட்டும் பிசினெஸ் மேக்னட் ஆகவும் மாஸ் காட்டியிருந்தார் ரஜினி. நண்பனால் துரோகம் செய்யப்பட்ட போது ரஜினி உடன் இணைந்து பார்வையாளர்களும் தாரை தாரையாக கண்ணீர் வார்த்தனர். இப்படி எமோஷன், மாஸ், ஆக்ஷன் என பக்கா கமர்ஷியல் எண்டெர்டெயினராக வெளியான இப்படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
 

From Around the web