ஊரடங்கின் போது நடக்கும் ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பு..!

 
ஊரடங்கின் போது நடக்கும் ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பு..!

பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்புக்கு இரவு நேர சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தெலங்கானாவில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு 2 வாரங்களுக்கும் மேலாக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதால் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

தெலங்கானாவில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண் உள்ளிட்டோர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் அண்ணாத்த பட படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

From Around the web