விநாயகர் சதுர்த்தி நாளில் வெளியாகும் அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக்..!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் விநாயகர் சதுர்த்தி நாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
‘தர்பார்’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. எப்படியாவது மெகா ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்கிற நோக்கில், இந்த படத்தில் மிகுந்த ஆர்வமுடன் நடித்து முடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடித்துள்ளனர். ரஜினிகாந்துக்கு மீனா ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாகவும் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் நயன்தாரா கவுரவ வேடத்திலும், குஷ்பு வில்லியாகவும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பிரச்னையால் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. எனினும் துரிதமாக அனைத்து ஷூட்டிங் பணிகளும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்டு 27-ம் தேதி இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. வரும் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளை முன்னிட்டு அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 - cini express.jpg)