அண்ணாத்த பட ஷூட்டிங் நிறைவு- அடுத்தது ரிலீஸ் தான்..!

 
அண்ணாத்த படம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. கபாலி, காலா, தர்பார் என வரிசையாக ரஜினி நடித்து வரும் படங்களில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதற்காக பக்கா கமர்ஷியல் தளத்தில் உருவாக்கப்பட்டு வரும் படம் தான் அண்ணாத்த. மாபெரும் மெகா வெற்றியை குறிவைத்து மட்டுமே இந்த படம் தயாராகி வருகிறது. இதில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, யோகி பாபு, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாக தெரிகிறது. அதேபோல, குஷ்பு எதிர்மறை கதாபாத்திரத்திலும் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்திலும் நடிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. 

மேலும் அண்னாத்த படத்தில் வலுவான கவுரவ வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ஜெகபதி பாபு வில்லனாக நடித்துள்ளார். வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று இப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் இந்த படத்துக்கான இறுதிக்கட்ட ஷூட்டிங் வட இந்தியப் பகுதிகளில் நடந்து வந்தன. அவை அனைத்தும் தற்போது முடிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் விரைவிலேயே படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கப்படவுள்ளன.

முன்னதாக ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டார். இதையடுத்து தயாரிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் புதிய அப்டேட்டுகளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 
 

From Around the web