’அண்ணாத்த’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்..!

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வரும் தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக ப்ரோமோஷன் பணிகளை விநாயகர் சதுர்த்தி நாளில் தொடங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். அதன் முதல் முயற்சியாக அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
#AnnaattheFirstLook @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals#AnnaattheDeepavali pic.twitter.com/pkXGE022di
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
வேட்டி, சட்டையில் கெத்தாக கூலிங் கிளாஸ் அணிந்தவாறு ரஜினிகாந்த் உயர்ந்து பார்க்கும் விதத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சமூகவலைதளத்தில் இந்த போஸ்டர் வெளியானதை அடுத்து ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தப் படத்தில் சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் அண்ணாத்த போஸ்டர் டிரெண்டிங்காகி வருகிறது.