வெளியான முதல் நாளிலேயே இணையத்தில் லீக்கான ‘அண்ணாத்த’ படம்..!
Updated: Nov 5, 2021, 17:06 IST

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழுவையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
ஏற்கனவே இந்த படம் ஆன்லைனில் வெளியிடக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாத்த படம் தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
இது படக்குழுவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதை அடுத்து, தயாரிப்பு நிறுவனம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.