நயன்தாராவுடன் ரொமேன்ஸ் செய்யும் அண்ணாத்த- வெளியாகும் புதிய பாடல்..!

 
அண்ணாத்த பாடல் போஸ்டர்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, யோகி பாபு, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளது. அதன்படி படத்தில் இடம்பெற்றுள்ள  ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய கடைசிப் பாடலாகும்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சார காற்றே என்கிற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவின் டூயட் பாடலாக உருவாகியுள்ளது. எதிர்பாராத இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. 

From Around the web