ஓடிடியில் ரிலீஸ் ஆன அண்ணாத்த - ரசிகர்கள் அதிர்ச்சி ..!!

 
1

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ம் தேதி ரிலீசு ஆனது.

நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு கலவையான விமர்சனம் மக்களிடம் கிடைத்துள்ளது.

இந்த படம் 200 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியான செய்தியை ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் சத்தமே இல்லாமல் இரண்டு ஓடிடியில் வெளியானது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .தலைவர் படத்தை வெறும் 20  நாட்களில் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடியிலும் ‘அண்ணாத்த’ திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து தான் ஓடிடியில் ரிலீசாக வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் 20 நாட்களில் ஓடிடியில் ரிலீசாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

From Around the web