மாநாடு படத்துக்கு தேதி குறிச்சாச்சு- விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!
Jul 5, 2021, 12:52 IST
மாநாடு படத்தின் வெளியீடு தொடர்பாக இணையத்தில் ஒரு தகவல் உலாவி வந்த நிலையில், அதை உறுதிப்படும் விதமாக மேலும் சில பதிவுகள் வைரலாகி வருகின்றன.
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் ‘மாநாடு’. மிகவும் வித்தியாசமான முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்துள்ளார்.
தமிழக ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பி வரும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் மாநாடு படத்தை அக்டோபரில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என இணையதளங்களில் தகவல்கல் பரவி வருகின்றன.
 - cini express.jpg)