ராணவை தொடர்ந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்!

 
Q

கடந்த சில தினங்களாக பிக்பாஸ் 8வது சீசன் அதிக திருப்பங்களையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்த சீசன் சுவாரஸ்யமான முறையில் நடைபெறுகிறது, மற்றும் ஜனவரி மாதம் தொடங்கிவிட்டதால், பிக்பாஸ் 8வது சீசன் முடிவை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன்கள் நடைபெறும் நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து ராணவ் வெளியேறியுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. அதேபோல், மற்றொரு போட்டியாளர் மஞ்சரியும் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் 8 இல் வெற்றியாளராக யார் வருவார்கள் என்பது தற்போது பெரிய கேள்வியாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளர் சிறந்தவராக தோன்றி வரும் நிலையில், முடிவை பற்றி முன்னறிவிப்பது மிகவும் கடினமாக உள்ளதாய் தெரிகிறது.

அதே நேரத்தில் டிக்கெட் டூ பினாலே வென்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார் ராயன்.

From Around the web