6 முறை தேசிய விருது வென்ற பாடகி சித்ராவுக்கு மேலும் ஒரு கவுரவம்..!
Nov 10, 2021, 16:05 IST
தென்னிந்திய சினிமாவின் சின்னக்குயில் என்று குறிப்பிடப்படும் கே.எஸ். சித்ராவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மபூஷன் விருதை வழங்கி கவுரவித்தார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விருது விழாவில் தென்னிந்திய சினிமாவின் புகழ்பெற்ற பாடகியாகவும், ஆறு முறை தேசிய விருது வென்ற ஒரே பாடகியாகவும் இருக்கும் சித்ராவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. அவருடைய சார்பில் மகன் எஸ்.பி. பி. சரண் குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டார்.
 - cini express.jpg)