'ஆர் ஆர் ஆர்' படத்துக்கு இன்னொரு சர்வதேச விருது..!!

 
1

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான 'ஆர் ஆர் ஆர்' படம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ஆஸ்கார் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் ஆர் ஆர் ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் இடம்பெற்று உள்ளது.

1

இந்நிலையில் 'ஆர் ஆர் ஆர்' படத்துக்கு இன்னொரு சர்வதேச விருதான 'கோல்டன் டொமேட்டோ' விருது கிடைத்துள்ளது. ஹாலிவுட்டை சேர்ந்த ரோட்டன் டொமெட்டோஸ் வெப்சைட் ஒவ்வொரு படத்துக்கும் ரசிகர்களின் ரேட்டிங் கொடுக்கும். அதுபோல் சிறந்த படங்களுக்கு கோல்டன் டொமேட்டோ விருதையும் அறிவிக்கும்.

வாக்கெடுப்பில் ஆர் ஆர் ஆர் படம் ஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. 2 வது இடம் 'டாப் கன்' படத்துக்கும், 3-வது இடம் 'எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படத்துக்கும், 4-வது இடம் 'த பேட்மேன்' படத்துக்கும் ஐந்தாவது இடம் 'அவதார் 2' படத்துக்கும் கிடைத்துள்ளன.

From Around the web