ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து வெளியான வேறலெவல் அப்டேட்..!

 
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீடு தொடர்பாக முக்கியமான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

பாகுபலி வரிசை படங்களை தொடர்ந்து ராஜமவுலி மிக பிரமாண்டமாக இயக்கி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. தெலுங்கு , இந்தி, தமிழில் நேரடியாக தயாராகி வரும் இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி, கொஞ்சம் கற்பனையை கலந்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தை வரும் ஆகஸ்டு மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளன. அதனால் ஆர்.ஆர்.ஆர் படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் நேரடியாக வெளியாகிறது. அதே சமயத்தில் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. மேலும் கொரியன் , துர்கிஷ், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் போன்ற 12 அந்நிய மொழிகளிலும் ஆர்.ஆர்.ஆர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 
 

From Around the web