ஷிவாங்கிக்கு அடித்த மற்றொரு அதிர்ஷ்டம்- முக்கிய நடிகரின் படத்தில் முக்கிய கேரக்டர்..!

 
ஷிவாங்கிக்கு அடித்த மற்றொரு அதிர்ஷ்டம்- முக்கிய நடிகரின் படத்தில் முக்கிய கேரக்டர்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலரும் ரசிக்கக்கூடிய கோமாளியாக இருந்த ஷிவாங்கி மேலும் ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி திறமை கொண்ட பல புதியவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால் பல தொலைக்காட்சி நட்சத்திரங்கள் திரைப்பட நடிகர்களாக மாறியுள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த கோமாளியாக இருந்தவர் ஷிவாங்கி. இப்போது இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பாடகரும் நடிகருமான அருண்ராஜா காமராஜ் அடுத்ததாக இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்டிகள் 15’ படத்தை தமிழ் ரீமேக் செய்கிறார். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஷிவாங்கியை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். சாதிய ஏற்றத்தாழ்வுகளை குறித்து பேசும் அந்த படத்தில் ஷிவாங்கிக்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

From Around the web