அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு பிரபல நடிகை..!!
தமிழில் ‘இரண்டு’ படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா, வேட்டைக்காரன், என்னை அறிந்தால், சிங்கம், லிங்கா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்த அவர், ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு இந்திய மார்க்கெட்டையே கைப்பற்றி வைத்திருந்தார். இதுதவிர பஞ்சமுகி, அருந்ததி உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன.
41 வயதாகும் நடிகை அனுஷ்கா இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நவீன் பாலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில நடிகை அனுஷ்கா அரிய வகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேசிய அவர், ஏதேனும் ஒரு சமயங்களில் மிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நான் சிரிப்பேன். அப்படி நான் சிரித்தால் அதனை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன். இதனால் படப்பிடிப்பையே நிறுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்தார். ஏற்கனவே நடிகை சமந்தா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.