மாநாடு பட ரிலீஸுக்கு முன்பே வெளியாகும் மற்றொரு ரிலீஸ்..!

 
மாநாடு படம்

வரும் 25-ம் தேதி மாநாடு பட வெளியீடு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் தொடர்பான மற்றொரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு இழுபறிக்கு பிறகு மாநாடு படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவு செய்யப்பட்டு ரிலீஸுக்கு தயாரானது. அப்போது என்று பார்த்து ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

அதனால் தயாரிப்பாளர் காமாட்சி ‘மாநாடு’ பட ரிலீஸ் தேதி மாற்றி அமைத்தார். தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை பயன்படுத்தும் விதமாக மாநாடு படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.


அதன்படி மாநாடு படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி துவங்கியுள்ளார். அதற்கான முதற்கட்ட அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, விரைவில் மாநாடு பட ஆடியோ வெளியாகும் என சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

டைம் லூப் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவிட்டது. இதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாநாடு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
 

From Around the web