யாருக்கும் தெரியாத விஜே விஷாலின் இன்னொரு பக்கம்..!  

 
1

பிக்பாஸ் சீசன் 8ற்கான கிராண்ட் பைனலில் இறுதியாக முத்துக்குமரன், ரயான், விஷால் மற்றும் பவித்ரா, சௌந்தர்யா ஆகிய ஐந்து போட்டியாளர்களும் தேர்வாகியுள்ளனர். இதில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெற்றி பெறப் போகின்றார்கள் என்ற ஆவல் அனைவரிடத்திலும் காணப்படுகின்றது. 

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்ட விஷால் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆகி மீண்டும் உள்ளே வந்த ராணவ், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து போட்டியாளர்கள் பற்றியும் பேசியுள்ளார்.

விஷால் பற்றி முக்கியமான விஷயத்தை பகிர்ந்து உள்ளார். அதில்  இந்த வயதில் இருந்தே பல உதவிகளை விஷால் செய்து வருவதாகவும், குறிப்பாக பெண் குழந்தைகளை படிக்க வைப்பதோடு நிறைய பேருக்கு டிரஸ் எடுத்துக் கொடுத்து உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார். இது எல்லாமே அவர்களுக்கு தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றார் என்று சொல்லியுள்ளார்.

மேலும் ஒரு வருடத்திற்கான படிப்பு செலவு, டிரஸ் செலவு என எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கின்றார் விஷால். இன்னும் இது போன்ற நற்பணிகளை செய்ய வேண்டும் என ராணவ்  வாழ்த்தியும் இருந்தார்.

இதன் போது பதில் அளித்த விஷால், ராணவுக்கு நன்றி சொல்லியதோடு, நான் யாருக்கு உதவி செய்கின்றேனோ அவர்களுக்கு இதுவரையில் நான் தான் உதவி செய்கின்றேன் என்பது தெரியாது, தன் வாழ்நாள் முழுவதும் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

From Around the web