ஓடிடி தளத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மற்றொரு படம்..!

 
கடைசி விவசாயி

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள சூழலில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படம் ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரிலீஸுக்கு தயாராகவுள்ள பல புதிய படங்கள் வெளியிடப்படாமல் உள்ளன. தொடர்ந்து கொரோனா பரவல் இருந்து வருவதால் பல்வேறு புதிய படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட உள்ளன.

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ஓ.டி.டி-யில் வெளிவருகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் ஜூன் 18-ம் தேதி இந்த படம் வெளிவரவுள்ளது. அதேபோல நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், த்ரிஷா நடித்துள்ள ராங்கி போன்ற படங்களும் ஓடிடியில் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளம் தர்பார் படம் ஏற்கனவே ஓ.டி.டி-யில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுவிட்டன. அதை தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமும் ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. அதுதான் ‘கடைசி விவசாயி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்தது மட்டுமில்லாமல் சொந்தமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசி விவசாயி படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் எந்த ஓ.டி.டி தளத்தில் இந்த படம் வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

From Around the web