பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் மற்றொரு ஜீ தமிழ் பிரபலம்..!

 
நடிகை ப்ரியா ராமன்

கடந்த சீசனில் தொகுப்பாளர் அர்ச்சனாவை பிக்பாஸ் வீட்டுக்குள் கூட்டி வந்ததை போல, இம்முறை மற்றொரு ஜீ தமிழ் பிரபலம் ஒருவரை நிகழ்ச்சிக் குழு அழைத்து வரவுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதனுடைய ஐந்தாவது சீசன் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

அதன்படி யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்கவுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் திருநங்கைகள் நமீதா மற்றும் மிளா இருவரும் பிக்பாஸ் புதிய சீசனில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல கடந்த முறை ஜீ தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றார். அது நல்ல டி.ஆர்.பி-யை நிகழ்ச்சிக்கு வழங்கியது. அதே ஃபார்மூலாவை இம்முறையும் பின்பற்ற நிகழ்ச்சிக் குழு முடிவு எடுத்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி பிரபலமாக அடையாளப்படுத்தப்படும் ப்ரியா ராமன் பிக்பாஸ் புதிய சீசனில் போட்டியாளராக வரவுள்ளார். அதனால் செம்பருத்தி சீரியலில் அவருடைய கதாபாத்திரம் ஒரு மாத காலமாக காட்டப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
 

From Around the web