எல்.சி.யூ யூனிவெர்சில் நான் சாக விரும்புகிறேன்- அதிர்ச்சி தந்த பிரபலம்..!!

பாலிவுட் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிப்பது குறித்து மிகவும் ஆர்வமுடன் பேசியுள்ளார்.

 
lokesh kanagaraj

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கென்னடி. இந்த படம் உலக திரைப்பட அரங்கில் திரையிடப்பட்டு சுமார் 7 நிமிடங்கள் வரை கைத்தட்டல்களை பெற்றன. இதையடுத்து படம் எப்போது வெளியாகும் என்று இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஊடகங்களிடம் பேசிய அனுராக், தமிழ் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பெருமையுடன் பேசியுள்ளார். அவருடைய படங்களில் தான் நடிக்க விரும்புவதாகவும், அவருடைய கற்பனைக்கு ஏற்ப எல்.சி.யூ நடிகராக இருந்து, படத்தில் சாக விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

anurag kashyap

தொடர்ந்து பேசிய அவர், வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குநர். அவர் ஒரு ஜீனியஸ். விமர்சனங்கள் இருந்தாலும் விடுதலை படம் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த படத்தில் சூரி மற்றும் ராஜீவ் மேனனின் நடிப்பு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

kennedy movie

விஜய் சேதுபதி தமிழ் நடிகராக இருந்தாலும், அவருடைய நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் திருப்திப்படுத்த முடியும். மிகவும் சிறப்பான பங்களிப்பை அவர் இந்திய சினிமாவில் வழங்கி வருகிறார். தமிழ் சினிமா தேர்ந்த ஒரு பாதையில் பயணித்து வருகிறது என்று அனுராக் காஷ்யப் வாழ்த்து தெரிவித்தார். 

From Around the web