பிறந்தநாளன்று புதிய படத்தில் கமிட்டான அனுஷ்கா..!
Nov 8, 2021, 11:45 IST
பாகுபலி பட நாயகி அனுஷ்கா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை அனுஷ்கா நேற்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் அவர் தேசியளவில் கவனமீர்த்த நடிகையாக உள்ளார்.
இவர் கடைசியாக மாதவனுடன் ‘நிசப்தம்’ என்கிற படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து அவர் எந்தவிதமான படத்திலும் நடிக்கவில்லை. இப்படம் மொத்தம் நான்கு மொழிகளில் வெளியானது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி பாகுபலி-1 மற்றும் 2 படங்களை தயாரித்த யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அனுஷ்கா நடிக்கும் 48-வது திரைப்படம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 - cini express.jpg)