அனுஷ்காவின் புதிய படம் டிராப்- ரசிகர்கள் அதிர்ச்சி..!

 
அனுஷ்கா

அனுஷ்காவின் அடுத்த தெலுங்குப் படம் குறித்து எதுவும் தெரியாது என இயக்குநர் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்திருந்த ‘நிசப்தம்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி கவனமீர்த்தது.

அதை தொடர்ந்து தெலுங்கில் நவீன்பொலி ஷெட்டி என்பவருடைய படத்தில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. இந்த படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் சார்பாக பி. மகேஷ் என்பவர் தயாரிக்கவுள்ளதாக தெரியவந்தது.

காதல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அனுஷ்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அறிவிப்பு வெளியான பின்பு, படத்திற்கான ஷூட்டிங் துவங்கப்படவில்லை.

அண்மையில் இயக்குநர் நவீன்பொலி ஷெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பி. மகேஷ் படம் குறித்து எதுவும் தெரியாது என்றார். அனுஷ்கா படம் துவங்கப்படுவது என்றால், அவர்கள் தான் இதுகுறித்து முதன்மையாக அறிவிக்கவேண்டும் என்றார்.

இந்நிலையில் அனுஷ்கா - நவீன்பொலி ஷெட்டியின் படங்கள் டிராப் செய்யப்பட்டுவிட்டதாக டாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விரைவில் தயாரிப்பு தரப்பி உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும். 


 

From Around the web