ஒலிம்பிக் போட்டிக்காக ஏ.ஆர். ரஹ்மான் வெளியீடும் பாடல்- முழு விபரம்..!

 
ஏ.ஆர். ரஹ்மான்

இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் புதிய பாடலை உருவாக்கியுள்ளார்.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி துவங்குகின்றன. மொத்தம் 22 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகள் வரும் ஆகஸ்டு 8-ம் தேதி நிறைவடைகிறது.

இந்த போட்டிக்காக முதன்முறையாக தமிழ்நாட்டில் இருந்து 11 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதனால் இந்தியாவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை காண ஆவலாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய பாடலை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இந்த பாடல் இன்று வெளியாகிறது.

இந்த பாடலை அனன்யா என்பவர் பாடியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், நமது நாட்டின் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஹிந்துஸ்தானி வே என்கிற பாடல் தயாராகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய தடகள போட்டிகள், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் போன்றவற்றுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web