அள்ளி கொடுத்த ஏஆர் முருகதாஸ்..! அப்போ நயன்தாராவை விட ராஷ்மிகாவிற்கு சம்பளம் அதிகமா ? 

 
1

மலையாள படங்களுக்கு மட்டும் ஓரளவு சம்பளத்தை குறைத்துக் கொள்ளும் நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க 10 கோடிக்கு குறைவாக சம்பளம் வாங்குவதில்லை என்று கூறப்படுகிறது. 

நயன்தாராவை விட அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் த்ரிஷா கூட இன்னும் 10 கோடியை நெருங்கவில்லை என்ற நிலையில் நயன்தாராவை ஒரே ஒரு வெற்றிப்படம் மூலம் ராஷ்மிகா மந்தனா சம்பள விஷயத்தில் பின்னுக்கு தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. 

பாலிவுட் திரையுலகில் ’அனிமல்’ என்ற திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்தார் என்பது மட்டுமின்றி அந்த படத்தில் அவர் கிளாமரிலும் தாராளம் காட்டினார். இந்த நிலையில் தற்போது சல்மான் கான் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சிக்கந்தர்’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் ஹீரோயின் என்ற நிலையில் இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

‘சிக்கந்தர்’ படத்திற்காக ராஷ்மிகா மந்தனா 15 கோடி சம்பளம் கேட்ட நிலையில் ஏஆர் முருகதாஸ், 13 கோடி வரை தயாரிப்பாளரிடம் பேசி வாங்கி கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும் இதனை அடுத்து அவர் ’அனிமல்’ என்ற ஒரே ஒரு படத்தின் வெற்றி காரணமாக நயன்தாராவை சம்பள விஷயத்தில் பின்னுக்கு தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது.

From Around the web