நூலிழையில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன்..!!

 
1

இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கு ஏ.ஆர்.அமீன் என்கிற மகனும் உள்ளார். இவர் தற்போது இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார். நிறைய பாடல்களை சொந்தமாக கம்போஸிங் செய்து வருகிறார். இவர் ‘ஓகே கண்மணி’ படத்தில் பின்னணி பாடகராக தனது பயணத்தை தொடர்ந்தார். பில்லியன் ட்ரீம்ஸ் , 2.0 உள்ளிட்ட படங்களிலும் அமீன் பாடல்களை பாடியுள்ளார்.

Ameen

இந்த நிலையில் இவர் ஒரு பெரும் விபத்திலிருந்து எப்படி தப்பினார் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமீன் கூறுகையில் நான் இன்று பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்கு கடவுள், எனது பெற்றோர், குடும்பம், நலம் விரும்பிகள், எனது ஆன்மீக குரு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு பாடலின் படப்பிடிப்பில் இருந்தேன்.

பாதுகாப்பு தொடர்பாக அதற்கான குழுவினர் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என நம்பியிருந்தேன். அதனால் நான் கேமராவை பார்த்து நடிப்பதில் குறியாக இருந்தேன். நான் நடுவில் நின்றிருந்தேன். அப்போது கிரேனில் இருந்த விளக்குகள் அதிலிருந்து அறுந்து கீழே விழுந்தன. சில நொடிகளுக்கு முன்பு விழுந்திருந்தால் , சரியாக அந்த விளக்குகள் என் தலைக்கு மேல் விழுந்திருக்கும். நானும் எனது குழுவும் அதிர்ச்சி அடைந்தோம். இன்னமும் அந்த ஷாக்கிலிருந்து மீள முடியவில்லை என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

சினிமா துறையில் கிரேன் உள்ளிட்டவை விழுந்து விபத்து ஏற்படுவதால் நிறைய பேர் உயிரிழக்கவும் காயமடையவும் செய்கிறார்கள். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது போன்ர விபத்துகளால் எத்தனையோ பேர் தங்கள் உறுப்புகளை இழந்து அவதியடைந்து வருகிறார்கள்.

From Around the web