இசையமைப்பாளராகும் ஏ.ஆர். ரஹ்மான் மகள்..!!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக இருந்து வரும் கதீஜா, ஒரு புதிய படத்துக்கு இசையமைக்கிறார். இதுதொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
kadhija

தென்னிந்தியாவில் பல பெண் இயக்குநர்கள் இருந்தாலும், அவர்களில் ஹலிதா ஷமீம் முற்றிலும் தனித்துவம் பெற்றவராக உள்ளார். பூவரசம் பீப்பீ என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக கால்பதித்த ஹலிதா ஷமீம், சில்லு கருப்படி, ஏலே போன்ற கவனிக்கத்தக்க படங்களை இயக்கினார்.

அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியான ”புத்தம் புது காலை விடியாதா” என்கிற ஆந்தாலஜி தொகுப்பில் ‘லோனர்ஸ்’ என்கிற கதையை அவர் இயக்கி இருந்தார். அந்த படம் பலரையும் கவர்ந்தது. ஓ.டி.டி பார்வையாளர்கள் மத்தியிலும் ஹலிதா ஷமீம் பிரபலமானார்.

haleetha shameem

இவர் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ‘மின்மினி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். குழந்தைகளாக இருந்து இளம் வயதினராக மாறுபவர்களின் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. அதன்படி படத்தின் முதல் பாதி 2015-ம் ஆண்டு படமாக்கிவிட்டார்.

அதனுடைய இரண்டாவது பாதியை 7 ஆண்டுகள் கழித்து தற்போது உருவாக்கி வருகிறார். இந்நிலையில் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஹா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் கதீஜா ஒரு பாடல் பாடியிருந்தார். சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்திலும் ஒரு பாடல் பாடியிருந்தார். ஆனால் அவர் படத்துக்கு இசையமைப்பது இதுவே முதல்முறையாகும். 


 

From Around the web