வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு!

 
1

இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ‘இசைப்புயல்’ என அழைக்கப்படுகிறார். 7 தேசிய விருதுகள், 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளாார்.

இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர் ரகுமான் தற்போது பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இவருக்கு நீர்சத்து குறைபாடு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் அடுத்ததாக நடத்த உள்ள இசை நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார். அதாவது, வட அமெரிக்காவில் ‘தி ஒன்டேர்மென்ட்’ (THE WONDERMENT) என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி கோடை காலத்தில் நடைபெறும் என்றும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

From Around the web