ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் உடன் யுவன் இணைந்து பாடிய பாடல் வெளியீடு..!

 
ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் உடன் யுவன் இணைந்து பாடிய பாடல் வெளியீடு..!

முகமது நபிகளை புகழும் விதமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் இணைந்து பாடியிருக்கும் பாடலை வெளியிட்டுள்ளனர்.

 மதீனா நகருக்கு மக்களின் வேண்டுகோளை ஏற்று முகமது நபிகள் வருகை புரிந்தார். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த மக்கள் ஒரு பாடலை பாடினர். அதற்கு ‘தலா அல் பத்ரு அலாய்னா’ என்று பெயர். அந்த பாடலை தான் தற்போது யுவன் சங்கர் ராஜா மற்றும் அமீன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய யுவன் சங்கர் ராஜா, “‘தலா அல் பத்ரு அலாய்னா” போன்ற தெய்வீக பாடலுக்கு இசையமைத்தது பெருமையாக உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் ஏ.ஆர். அமீனுடன் இணைந்து பாடியதில் மேலும் மகிழ்ச்சி கூடியுள்ளது. எதிர்மறையான எண்ணங்கள் சூழ்ந்திருக்கும் இந்த தருணத்தில் இந்த பாடல் நமக்குள் ஒரு மலர்ச்சியை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

அதை தொடர்ந்து பேசிய ஏ.ஆர். அமீன், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாடலை பாடியதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துகள், அனைவருடைய வீட்டில் அன்பும் அமைதியும் நிறைந்திருக்கட்டும். இந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானம் ஏழை எளியோருக்கு வழங்கப்படவுள்ளது என்று அமீன் தெரிவித்தார்.

From Around the web