ஏ.ஆர். ரஹ்மானை இழிவுப்படுத்திய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா...!

 
பாலகிருஷ்ணா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை இழிவுப்படுத்தும் வகையில் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா பேசியதற்கு ரசிகர்கள் பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தெலுங்கில் இயங்கி வரும் தனியார் ஊடகத்துக்கு சமீபத்தில் நடிகர் பாலகிருஷ்ணா நேர்காணல் அளித்துள்ளார். அப்போது விருதுகளை துட்சமாக மதிப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். நெறியாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றதை பற்றி குறுக்கு கேள்வி கேட்டவுடன், அவர் யாரென்றே தனக்கு தெரியாது எனவும் பாலகிருஷ்ணா பேசியுள்ளர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்தவொரு விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்று அந்த நேர்காணலில் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் யார் என்று தெரியாது என்று குறிப்பிட்டதற்காகவும், நாட்டின் உயரிய விருதுகளை கால் விரலுக்கு சமம் என்று பேசியதற்காகவும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு தேசியளவில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
 

From Around the web