சிம்பு நடிக்கும் படத்திற்கு இரண்டு பாடல்களை முடித்துக் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்..!

 
ஏ.ஆர். ரஹ்மான்

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பத்து தல படத்திற்காக இரண்டு பாடல்களை ஏ.ஆர். ரஹ்மான் முடித்துக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் தான் முடிவடைந்தன. அதை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கியவர் கிருஷ்ணா. இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தில் நடிக்கிறார் சிம்பு. கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் இந்த படத்திற்கான பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. அதற்கு முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

பத்து தல படத்தில் நடிகர் சிம்புவுடன் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். கும்கி படத்தில் கவனமீர்த்த ஜோயி மல்லூரி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கே.இ. ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

From Around the web