யூடியூபில் 50 கோடி பார்வைகளை கடந்து ‘அரபிக்குத்து’ சாதனை..!
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதில், அரபிக்குத்து பாடலில் இடம் பெற்ற விஜய்யின் நடனம், காட்சியமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது அரபிக்குத்து வீடியோ பாடல் யூடியூபில் 50 கோடி (500 மில்லியன்) பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Pan World Hit🔥 500 Million+ views and counting💥 #ArabicKuthu
— Sun Pictures (@sunpictures) September 17, 2023
▶ https://t.co/oVRBhkMBIE@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @jonitamusic #Beast pic.twitter.com/pMxJAnOT6w