தியேட்டரில் மாஸ் வெற்றி கொடுத்த அரணமனை 4 ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! 

 
1

தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய  வெற்றி பெற்ற ’அரண்மனை 4’ திரைப்படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெரும் என்றும் குறிப்பாக இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் அதிகமாக தியேட்டருக்கு வந்ததால் ஓடிடியில் குடும்பத்தோடு படத்தை பார்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, ராமச்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.   ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

’அரண்மனை 4’ படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கிய ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த படத்தை ஜூன் 21ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.


 

From Around the web