டிவியை விட்டு சினிமா ஷுட்டிங்குக்கு திரும்பிய அர்ச்சனா..!

 
அர்ச்சனா

உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்து வந்த தொகுப்பாளர் அர்ச்சனா, மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளார். அதற்காக சமூகவலைதள பக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியிலேயே அர்ச்சனா செட்டிலாகிவிட்டார். பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அவருக்கு மூளையில் பிரச்னை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுதி நாட்களில் அவர் வீடு திரும்பிவிட்டாலும், மேலும் சில மாதங்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் சில மாத இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவர் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளது.

இதுகுறித்து சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மீண்டும் திரும்பி வந்தேட்டேன்னு சொல்லு என்று தெரிவித்துள்ளார். மேலும் ரோபோ சங்கருடன் சேர்ந்து அவர் நடித்து வரும் படத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை தொகுப்பாளர் அர்ச்சனா யூ ட்யூபில் வெளியிட்டுள்ளார்.
 

From Around the web