டபுள் மீனிங்கில் பேசிய ரசிகரிடம் உச்சக்கட்ட கோபம் காட்டிய அர்ச்சனா..!

 
அர்ச்சனா

சமூகவலைதள லைவ் உரையாடலின் போது தன்னிடம் அசிங்கமாக பேசிய ரசிகருக்கு நடிகை அர்ச்சனாக நறுக்கென்று கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது.

சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை துவங்கி, பிரபலங்கள் நேர்காணல்கள், கார்ப்பரேட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, ஸ்டாண்டப் காமெடி செய்வது என கடின உழைப்பின் மூலம் வளர்ந்தவர் அர்ச்சனா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இவர் களமிறங்கிய பிறகு மேலும் புகழடைந்தார். கடந்த சீசனில் இவருடைய ஆட்டத்திறன் பலரையும் கவர்ந்தது. எனினும் யூ-ட்யூப்பில் அவர் நடத்தி வரும் சேனலில் தேவையில்லாத வீடியோ ஒன்றை பதிவிட்டு கடும் விமர்சனங்களை சம்பாதித்தார்.

இதன்மூலம் இதுவரை அவர் மீடியாவில் சம்பாதித்த அனைத்து நற்பெயருக்கும் கலங்கம் ஏற்பட்டது. பல்வேறு சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் ட்ரோல் செய்யப்பட்டு, தற்போது மீண்டும் புதிய பாய்ச்சலுடன் மீடியா பக்கம் திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு இன்ஸ்டா லைவ்வில் நடிகை அர்ச்சனா பங்கேற்றார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் தாகத முறையில் பேசினார். இதற்கு அர்ச்சனாவும் தக்க பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web