அஜித் ரசிகர்களே ரெடியா ? 'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
1

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படம் எதிர்வரும் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்த போதே, இடையில் இந்த படத்திலும் சைன் செய்தார். இதில், அஜித்திற்கான காட்சிகள் சுமார் 3 மாதங்களுக்குள் படமாக்கி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

துணிவு படத்திற்கு பிறகு அஜித் குமார் கமிட் ஆன படம், விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீது அதிகளவு எதிர்பார்ப்புகள் எழுந்தன. ஆனால், இந்த படத்தின் வேலைகளோ, ஆமை வேகத்தில்தான் நடந்தது. அஜித் பைக் டூர் கிளம்பியதால் ஷுட்டிங் தாமதமானதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக ஓராண்டுக்கும் மேல் ஆனாலும், அஜர்பைஜானில் கொஞ்சமும், இந்தியாவில் கொஞ்சமும் எடுத்து முடிக்கப்பட்டது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. 

படம் வரப்போவதை எண்ணி, ரசிகர்கள் அனைவரும் குஷியில் புத்தாண்டை கொண்டாட காத்திருக்க, 2025 பிறப்பதற்கு அரை மணி நேரம் இருக்கும் போது “படம் பொங்கலுக்கு வெளிவராது” என்ற அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது. இதை கேட்டவுடன் ரசிகர்கள் கடுப்பின் உச்சிக்கே சென்றனர்.

இந்நிலையில், கையில் துப்பாக்கியுடன் மாஸ் கெட்டப்பில் அஜித்தின் புகைப்படத்துடன் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web