மக்களே ரெடியா ? இன்று வெளியாகிறது அயலான் பட ட்ரைலர்..! 

 
1

 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் அயலான். 

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.இயக்குநர் ரவிக்குமாரின் ‘நேற்று இன்று நாளை’ படம் மக்களிடையே வரவேற்பினை பெற்றது. அயலான் அவரது 2வது படம்.

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படம் வருகிற ஜன.12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 5ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


‘அயலான்’ படத்தை இசை வெளியீட்டு விழா துபாயில் JBR பீச்சில் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


 

null


 

From Around the web