தீபாவளிக்கு இத்தனை படங்கள் ரிலீசா??

 
1

 ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தீபாவளி ஸ்பெஷலாக வரவுள்ளது..இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார்…

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகியுள்ளது, ஜப்பான்.இப்படம் வரும் 10ஆம் தேதி தீபாவளிப் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது…இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது..

நடிகர் விக்ரம் பிரபு மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரெய்டு படம் தீபாவளியை ஒட்டி ரிலீஸாக இருக்கின்றது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..இந்த படம் நிச்சயம் ஒரு மிக பெரிய Comeback கொடுக்கும் என சொல்லவும் படுகின்றது…

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர்.இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார்…இது தீபாவளி விருந்தாக நவம்பர் 10 ஹாட்ஸ்டாரில் வருகின்றது…

ஹாலிவுட் படமான ‘தி மார்வெல்ஸ்’ தீபாவளியை முன்னிட்டு நவ.10-ம் தேதி வெளியாக இருக்கிறது. மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸின் 33 வது படமான இதை, நியா டகோஸ்டா இயக்கியுள்ளார். இதில், ப்ரி லார்சன், டியோனா பாரிஸ், சாமுவேல் எல். ஜாக்சன், சியோ-ஜுன் பார்க், ஜாவே அஸ்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்…இந்த படத்திற்கு முக்கியமாக சமந்தா வாய்ஸ் தந்துள்ளார்..

நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டைகர் 3’ இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்ட முதலே ஹைப் அதிகம் ஆனது..இப்போது இப்படமும் தீபாவளியை முன்னிட்டு வர இருக்கின்றது..

From Around the web