சூர்யா ரசிகர்களே ரெடியா ?‘சூர்யா 42’ படத்தில் நடிக்க ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு..!!

 
1

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வரும் இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகிறது. இரு பாகங்களாக உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் 13 வேடங்களில் நடிகர் சூர்யா நடிக்கிறார்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

suriya 42

இந்நிலையில் ‘சூர்யா 42’ நடிக்க ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிப்பில் ஆர்வமுள்ள 25 முதல் 55 வயது வரையிலான நடிகர்கள் படக்குழுவினருக்கு தேவை. அதனால் நல்ல உடல் கட்டமைப்புடன் கூடிய தாடி, மீரையுடன் நீண்ட தலைமுடியுடன் இருக்கும் நபர்கள் தங்களுடைய புகைப்படம் மற்றும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களை எங்களுக்கு அனுப்பலாம். விருப்பமுள்ள நடிகர்கள்  resumesivateam@aol.com என்ற மின்னஞ்சல் முகவரி உங்கள் விபரங்களை அனுப்பமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

From Around the web