ரசிகர்களே ரெடியா ? இன்று இந்தியன் 2 மற்றும் புஷ்பா படத்தின் சிங்கள் ரிலீஸ்..! 

 
1

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இப்படத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள இப்படம் பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதையடுத்து படத்தின் இரண்டாம் பாடல் இன்று 29-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை பொறுத்தவரை சித்தார்த் – ரகுல் ப்ரீத் சிங் இடையிலான காதல் பாடலாக உருவாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல்,அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

அதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான ‘சூசெகி (The Couple Song)’பாடல் இன்று காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. இதுக்குறித்தான ப்ரொமோ வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில். தற்பொழுது படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அல்லு அர்ஜுனும் ராஷ்மிகா மந்தன்னாவும் சந்தோஷமாக ஆடுவது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. முதல் பாடல் வெற்றியை தொடர்ந்து இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

1

From Around the web