இந்த வாரம் ஓடிடி தளங்களில் இத்தனை படங்கள் வெளியாகிறதா ?

 
1
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் மற்றும் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்ற விவரங்களை தற்போது பார்ப்போம்.

1. விஜய் சேதுபதி, காத்ரீனா கைப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

2. சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி இராமசாமி’ என்ற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது

3. ‘எனக்கு எண்டே கிடையாது’ என்ற திரைப்படம் ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளது

4. ‘நந்திவர்மன்’ என்ற படம் டென்டுகொட்டா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

5. யோகி பாபு நடித்த ’தூக்குத் துரை’ என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது

6. ’டெவில்’ என்ற திரைப்படம் டென்ட்கொட்டா ஓடிடியில்  வெளியாக உள்ளது

மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடியில்’ஹார்ட் பீட்’ என்ற வெப் சீரிஸ் மற்றும் ‘சுழியம்’ என்ற வெப் சீரியல் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

அதேபோல் சில மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

’ப்ரீத்’ என்ற தெலுங்கு படம் மற்றும் ’சவுண்ட் பார்ட்டி’ என்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

’வளரி’ என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

‘யாத்ரா 2’ என்ற தெலுங்கு படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ‘ராணி’ என்ற மலையாளப் படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அன்வெஷிப்பின் கண்டேதும்’ என்ற மலையாள திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

6 தமிழ் திரைப்படங்கள், 2 தமிழ் வெப்சீரிஸ் மற்றும் 4 தெலுங்கு படங்கள், இரண்டு மலையாள திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாவதால் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

From Around the web