பாபநாசம் 2-வில் நடிக்கிறீர்களா..? நடிகை மீனா என்ன சொன்னார் தெரியுமா..?

 
மீனா

சினிமாவில் இரண்டாவது இன்னிங்கிஸை தொடங்கி வெற்றிகரமாக வலம் வரும் நடிகை மீனா, கமல்ஹாசனுடன் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

பிரபலங்கள் அவ்வப்போது சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பதிவிட்டு இருந்தார்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் ‘பாபநாசம்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த மீனா நடிகர் கமல்ஹாசனை டேக் செய்து, இந்த கேள்வியை அவரிடம் கேளுங்கள் என்று ரசிகருக்கு பதிலளித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான த்ரிஷயம் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான முதல் பாகத்தில் தமிழில் கதாநாயகியாக கவுதமி நடித்திருந்தார்.

ஆனால் கமல்ஹாசனை விட்டு அவர் பிரிந்துவிட்ட படியால் கவுதமி பாபநாசம் 2-வில் நடிக்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக படக்குழு மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

From Around the web