இன்று ஓடிடி-யில் வெளியாகிறது ‘ஆர் யூ ஓகே பேபி’ படம்..!
Oct 31, 2023, 07:05 IST

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சமுத்திரகனி, அபிராமி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆர் யூ ஓகே பேபி’.இந்தப் படத்தை லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். லஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த கதைக்கரு ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இப்படத்தில் முல்லை அரசி, மிஷ்கின், முருகா அசோக், ஆடுகளம் நரேன், அனுபமா குமார், பாவெல் நவகீதன், ரோபோ சங்கர், வினோதினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் அக்டோபர் 31-ம் தேதியான இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.