தல தோனியின் நடிப்பை பார்க்க ரெடியா..?

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 14-வது சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை வென்றது.இன்றும் கூட ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இப்படி கிரிக்கெட்டில் பிசியாக இருக்கும் தோனி தற்போது சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார்.அவர் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் நடத்தி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் முதன்முதலில் தமிழ் படத்தை தான் தயாரித்து உள்ளது…இது ஒரு ஜாலி லவ் ஸ்டோரி என சொல்லியுள்ளனர்…
அதன்படி தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் படம் எல்ஜிஎம்.இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி தயாரித்துள்ளார் இப்படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக இவானா நடித்திருக்கிறார்.மேலும் நதியா, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், எல்.ஜி.எம் படம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வந்து உள்ளது. அதன்படி இப்படத்தில் தோனியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது தான். ஒருவேளை தோனி நடித்திருந்தால் இதுதான் அவர் நடிக்கும் முதல் படமாக இருக்கும்.இதற்கு முன்னர் ஏராளமான விளம்பரங்களில் தோனி நடித்துள்ளதால், இதில் முக்கிய ரோல் என சொல்லப்படுகிறது